கர்நாடகாவிலிருந்து உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி கொண்டு வரப்பட்ட கிரானைட் கற்களை வட்டாட்சியர் மற்றும் கனிம வளத்துறை அலுவலர்கள் பறிமுதல்செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கோம்பு பள்ளம் என்ற இடத்திற்கு உரிய அனுமதியில்லாமல் கிரானைட் கற்களை லாரியில் ஏற்றிக்கொண்டு வருவதாக வட்டாட்சியர், மற்றும் கனிம வளத்துறை அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் சத்தியமங்கலம் வட்டாட்சியர் கணேசன் மற்றும் கனிம வளத்துறை அலுவலர்கள் ஆகியோர் அங்கு வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த 3 லாரிகளை அவர்கள் சோதனை போட்டனர்.. அதில், 3 வாகனத்திலும் உரிய அனுமதியின்றி கிரானைட் கற்களை ஏற்றியிருந்தது தெரியவந்தது.. இதையடுத்து லாரிகள் பறிமுதல் செய்த போலீசார், டிரைவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.