Categories
தேசிய செய்திகள்

பாட்டி என்ன போடு போடுது ….! மூதாட்டியின் பேச்சை கேட்டு மிரண்ட இளைஞர் …!!

ஏழை பாட்டி ஒருவர் சரளமாக ஆங்கிலத்தில் பேசி ஆச்சரியப்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெங்களூரில் எடுக்கப்பட்ட அந்த காணொளியில் காரில் இருந்த இளைஞனொருவன் பாட்டியிடம் பேசுகின்றான். அதற்கு பாட்டி முழுதும் ஆங்கிலத்திலேயே பதிலளிக்கிறார். இளைஞன் தனக்கு ஆங்கிலம் தெரியாது என திணறுகிறான். பாட்டி ஆங்கிலத்தில் பேசுவதை கண்டு ஆச்சரியமடைந்த இளைஞன் அவர் குறித்த தகவலை கேட்டு தெரிந்து கொள்கிறான்.

பாட்டி ஆங்கிலம் பேசுவதை இளைஞன் மற்றும் அவனது நண்பன் பாட்டிக்கு உதவும் பொருட்டு  வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாக சமூகவலைதளங்களில் பரவி பாட்டியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |