இன்றைய காலகட்டத்தில் அனைவருமே ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை தான் பயன்படுத்துகின்றனர்.முன்பெல்லாம் பணத்தை எடுப்பதற்கு டெபாசிட் செய்வதற்கும் வங்கிக்கு நேரடியாக செல்ல வேண்டிய அவசியம் இருக்கும். ஆனால் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றம் என்பது மிகவும் சுலபமாகிவிட்டது.
பணம் அனுப்புவதற்கு பல மொபைல் செயலிகள் வந்துவிட்டன.இதனால் மக்களின் நேரமும் அலைச்சலும் மிச்சம் ஆகிறது. அதேசமயம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. தற்போது மக்கள் எந்த பொருள் வாங்கினாலும் கூகுள் பே, போன் பே மற்றும் பேடி எம் உள்ளிட்ட செயலிகள் மூலம் பரிவர்த்தனை செய்வது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ரூ பே கிரெடிட் கார்டுகளை ஜிபே, போன் பே மற்றும் பேடி எம் உள்ளிட்ட யுபிஐ சேவைகளில் இணைத்து பயன்படுத்தலாம் என கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.இதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் 2000 ரூபாய் வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கபடாது என NPCI அறிவித்துள்ளது.உள்ளூர் அளவிலான பண பரிவர்த்தனைகளை ஊக்கப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.