Categories
மாநில செய்திகள்

வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை காலி செய்ய நிர்பந்தித்தால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு எச்சரிக்கை!

வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை காலி செய்யுமாறு நிர்பந்திக்க கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியளவில் கொரோனா பாதித்த மாநிலத்தில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் 1,596 பாதிகக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்த நிலையில் 635 குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்கத்தில் மே 3 வரை ஊரடங்கில் தளர்வுகள் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசிய பணிகளை மக்கள் வெளியே வரக்கூடாது என்ற உத்தரவு நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா பணியில் ஈடுபட்டுள்ளவர்களை காலி செய்யுமாறு சில வீட்டின் உரிமையாளர்கள் நெருக்கடி அளிப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து வாடகை வீட்டில் வசிக்கும் சுகாதார பணியாளர்களை காலி செய்யுமாறு நிர்பந்திக்க கூடாது என தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி அளித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த பிரச்சனை குறித்து தீவிரமாக கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தடையை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் சென்னை மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நேற்று மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |