கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைசர் செந்தில்பாலாஜி, போலீஸ் விசாரணையில் 4, 5 பேரை சந்தேகப்படுகிறார்கள் என்றால், அதில் யார் குற்றவாளி யார் என அடையாளம் காணப்பட்ட பிறகுதான், காவல்துறை இறுதியாக பெயர் வெளியிடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காவல்துறை பெயரை வெளியிடுவதற்கு முன்பாகவே, ஒரு கட்சியை சேர்ந்த தலைவருக்கு தெரிகிறது என்று சொன்னால், தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க கூடிய நபர் பிஜேபியின் உடைய தலைவர்.
ஆண்ணாமலையை விசாரணை வலையதுக்குள் கொண்டு வந்து விசாரணை செய்யவேண்டும். காவல்துறை இது தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன்பாகவே ஒரு கட்சியைச் சார்ந்தவர், இந்த விசாரணையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது ? விசாரணைல யாரெல்லாம் சம்மந்தப்பட்டுள்ளார்கள்? என்னென்ன கைப்பற்றிருக்கிறார்கள் ? என்பதை உள்நோக்கிப் பார்த்து கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று சொன்னால் முதலில் விசாரிக்கப்படக்கூடிய நபர் நீங்கள் சொல்லக்கூடிய நபர்.
அவரை தேசிய புலனாய்வு அமைப்பு முதலில் அவரை விசாரிக்க வேண்டும். ஒரு சம்பவம் நடக்கின்றது. சம்பவத்துல சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் பெயர்களை காவல்துறை வெளியிடவில்லை. குற்றவாளிகள் யார் என்பதை உறுதி செய்த பிறகே அதனுடைய உண்மை தன்மையை காவல்துறை உயர் அதிகாரிகள் வெளியிடுகிறார்கள் என விளக்கம் அளித்தார்.