Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசு கடமையை செய்யுது… தப்பு இல்லனா நிரூபியுங்க… ரெய்டில் ADMKவுக்கு ஓபிஎஸ் ஷாக் …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அருமை அண்ணன் மரியாதைக்குரிய பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களுடைய தியாகத்தை போற்றுகின்றோம். அவர் இந்த திராவிட இயக்கம் தந்தை பெரியாரிலிருந்து, பேரறிஞர் அண்ணா வரை சேவை செய்தார். புரட்சித்தலைவர்,  புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா வரை… அவரோடு உடன் இருந்து பயணித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள், மரியாதைக்குரிய அருமை அண்ணன் பண்ருட்டி அவர்களை உலகத்திலேயே உச்சகட்ட அமைப்பான ஐநா சபையில் சென்று உரையாற்ற வேண்டுமென்ற என்ற கட்டளையிட்டு, அவர் தமிழகத்தின் குரலை மட்டுமல்லாமல,  இந்தியாவினுடைய ஒற்றுமையையும்,  மக்கள் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ?

-என்பதையும் ஐநா சபையில் விளக்கமாக உரையாற்றி அந்த பெருமையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பெற்று தந்தவர் மரியாதைக்குரிய அண்ணன் பண்ருட்டி அவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் காரணங்களுக்காக பல்வேறு காரணங்களை பல பேர் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அதையெல்லாம் நாம் புறந்தள்ளிவிட்டு அவர்கள், ஆட்சிய தொண்டை,  அவர்கள் செய்த தியாகத்தை மட்டுமே நாம் எண்ணி செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார். பின்னர், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தியது தொடர்பாக  செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், அரசு அவர்களுடைய கடமை செய்கிறார்கள். நிரூபிக்க வேண்டிய பொறுப்பு, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இருக்குது என தெரிவித்தார்.

Categories

Tech |