Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் முழு ஊரடங்கு என்ற செய்தி தவறானது… டெல்லி அரசு விளக்கம்..!!

டெல்லியில் வரும் 18ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு கடும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்ற தகவலுக்கு அம்மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவலுக்கு டெல்லி அரசு தற்போது மறுத்து தெரிவித்து உள்ளது. கடும் ஊரடங்கு பிறப்பிப்பது தொடர்பான எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் பல செய்திகள் பரவி வந்தன.

இந்த நிலையில், அது வெறும் வதந்தியே டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,224 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,182 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று கொரோனாவில் இருந்து 878 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,823 ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநிலத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை1,327 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |