திருச்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் 198 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக தன்னார்வலர்கள் அமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பொது மக்களை கொண்டு கிராமப்புற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் 2017 ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து சமூக தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டது.
அதில் பல்வேறு விதங்களில் நிதி இழப்பை ஏற்படுத்தும் வகையில் 198 கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக அறிக்கை திருச்சி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து, இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.