மே 18 முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு சொல்லி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். திங்கள் முதல் சனி வரை வாரத்தில் ஆறு நாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும். அனைத்து குரூப்-ஏ அலுவலர்களும், தலைமை பொறுப்புகளில் இருப்பவர்களும் வாரத்தில் 6 நாட்களும் பணிக்கு வர வேண்டும் என்று அரசு சொல்லியுள்ளது. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு , இரண்டு இரண்டு நாட்களாக சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.
அதாவது முதல் இரண்டு நாட்களுக்கு (திங்கள், செவ்வாய்) முதல் குழுவும், (புதன், வியாழன்) இரண்டாவது குழுவும், (வெள்ளி, சனி) மீண்டும் முதல் குழுவும் வேலைக்கு செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. திங்கட்கிழமை மீண்டும் வரும்போது இரண்டாம் குழு (திங்கள் செவ்வாய்), முதல்குழு (புதன், வியாழன்), இரண்டாம் குழு (வெள்ளி, சனி) ஞாயிறு விடுமுறை என்று அரசு உத்தரவு போட்டுள்ளது. அரசு ஊழியர்கள் பணிக்கு வர ஏதுவாக பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என்றும் , அலுவலகத்திற்கு ஊழியர்கள் எப்போது அழைத்தாலும் வர தயாராக இருக்க வேண்டும் என்றும் அரசு மிகத் தெளிவாக சொல்லி உள்ளது.