Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஊரடங்கில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கான வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது.

  • 200 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர் இருக்க வேண்டும்.
  • 1000 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளுடன் தங்களை இணைத்து கொள்ள வேண்டும்.
  • தொழில் நிறுவன வளாகம் மற்றும் வாகனங்களை நாள்தோறும் இரண்டு முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
  • கழிப்பறைகளை கிருமி நாசினி கொண்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுத்தம் செய்ய வேண்டும்.
  • தொழில் நிறுவன வளாகத்திற்குள் தொழிலாளர்கள் வரும் போது, வெளியே செல்லும் போது தெர்மல் ஸ்கேன் செய்ய வேண்டும்.
  • தொழிலாளர்களுக்கு இடையே சமூக இடைவெளி இருக்க வேண்டும் சோப்பு அல்லது சானிடைசர் மூலம் தொழிலாளர்கள் தங்களது கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
  • 55 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக தகுதி உள்ளவர்களை மட்டுமே வேலைக்கு அழைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
  • தேவையற்ற பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்க கூடாது.
  • அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும்மேற்கண்ட வழிகாட்டுதல்களை நாளை முதல் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |