Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை… வங்கிகளை ஏமாற்றி ரூ.525 கோடி மோசடி… கில்லாடி நெட்வொர்க்..!!

ஒரு பெரிய வங்கி மோசடியில் நாட்டின் முக்கிய வங்கிகள் 500 கோடி ரூபாய்க்கு மேலே ஏமாற்றப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வங்கி மோசடிகள் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவு இரண்டு தனித்தனியான வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு 452.62 கோடி, பேங்க் ஆப் பரோடா 73 கோடி மோசடி செய்யப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் கூட்டமைப்பு மோசடி செய்த குற்றச்சாட்டின் பெயரில் குஜராத்தின் அகமதாபாத் தளமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் மற்றும் சில அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலர் மீது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரின் பெயரில் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2013 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 452.62 கோடி மோசடி செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளின் கூட்டமைப்புடன் மோசடி செய்த சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை தொடர்ந்து சிபிஐ குற்றம்சாட்டப்பட்டவர்கள் கணக்குகளை ஆராய்ந்ததில் வங்கிகளின் நீதியில் 452.62 கோடியே தங்கள் கணக்குக்கு திருப்பி விட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் காந்தி நகரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மற்றும் அறியப்படாத சில அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது எழுதி 72.55 கோடி ரூபாய் வங்கி ஏமாற்றியதாக எழுந்த புகாரின் பெயரில், பேங்க் ஆப் பரோடாவில் இருந்த புகாரின் பேரில் சிபிஐ இரண்டு வழக்கை பதிவு செய்துள்ளது. இரு வழக்கையும் தீவிரமாக எடுத்துள்ள சிபிஐ, மோசடி குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Categories

Tech |