Categories
மாநில செய்திகள்

கொரோனா தகவல்களை அரசு மறைக்கவில்லை , மறுக்கவும் இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்!

கொரோனா தகவல்களை அரசு மறைக்கவில்லை , மறுக்கவும் இல்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,843 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்தரை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் பாராட்டியுள்ளது என கூறியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்த அவர்,

மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகள் அனைத்தையம் மறுப்பதாக தெரிவித்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட உள்ளிட்ட வல்லரசு நாடுகளையே கொரோனா வைரஸ் உலுக்கி கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகள் விழி பிதுங்கி நிற்கின்றன வேளையில், தமிழக அரசு களத்தில் நின்று போராடி வருகிறது

என்றும் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா வைரசை அரசு கட்டுப்படுத்தி வருகிறது, கடுமையான சூழ்நிலைகளிலும் தமிழக அரசு அதிகமான பரிசோதனைகளை மேற்கொள்கிறது என அவர் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொடர்பான எந்த தகவலையும் அரசு மறைக்கவில்லை , மறுக்கவும் இல்லை. இதுவரை 25344 நபர்களை குணப்படுத்தி உள்ளோம், 18403 பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Categories

Tech |