சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து நடத்துனரும், அரசு பேருந்து நடத்துனரும் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து நடத்துனருக்கும் அரசு பேருந்து நடத்துனரும் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சிதம்பரத்திலிருந்து காலை 6:15 மணிக்கு லட்சுமி என்ற தனியார் பேருந்தும், 6.20 மணிக்கு அரசு பேருந்தும் புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கின்றன. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி அரசு பேருந்து 6.15 மணிக்கு இயக்கபட்டுள்ளது.
இதனால் அரசு பேருந்து நடத்துநர் அறிவழகனிடம் தனியார் பேருந்து நடத்துநர் நவீன் என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.