Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இப்படியா பயணம் செய்யுறது… காற்றில் பறக்கவிட்ட விதிமுறைகள்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்துக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

கொரோனா தொற்றின் 2 – வது அலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் அலுவலர் மற்றும் தாசில்தார் தீடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழக அரசின் விதிமுறைகளை மீறி புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் செல்லும் பேருந்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முகக் கவசம் அணியாமலும் 56 பயணிகள் பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.

  1. இதனைப் பார்த்த அதிகாரிகள் கண்டக்டர் மற்றும் டிரைவர் ஆகிய இருவரையும் எச்சரித்ததோடு பேருந்து போக்குவரத்து கழகத்திற்கு 500 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சிறுவாணி பகுதியில் முகக் கவசம் அணியாமல் சென்ற 40 பேருக்கு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |