நாடு முழுவதும் அடுத்த பொதுமுடக்க தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 30 ஆம் தேதி வரை இது கடைபிடிக்கப்படுகிறது. இதற்கான உத்தரவை 4 தினங்களுக்கு முன்பு மத்திய அரசு வெளியிட்ட நிலையில், தமிழகத்தில் நேற்று வெளியிடப்பட்டது. பல்வேறு விஷயங்களில் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,நாடு முழுவதும் ஒவ்வொரு பள்ளிகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம் ஏற்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன் மூலம் வார்டு வாரியாக அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும், எந்த நேரத்தில் மக்கள் செல்ல வேண்டும் உள்ளிட்ட விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும். இதற்காக அனைத்து மாநிலங்களிலும் செயலாக்க குழுக்களை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.