இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டதால் கொந்தளித்த மக்கள் அதிபர் மாளிகைக்குள் அதிரடியாக நுழைந்தனர். அதற்குள் அதிபர் தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். அவர் எங்கு சென்றார்? என்று தகவல் தெரியாமல் இருந்தது. அவர் தன் குடும்பத்தாருடன் மாலத்தீவுக்கு இராணுவ விமானத்தில் தப்பியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை அவர் நியமித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோட்டபாய ராஜபக்சே மாலத்தீவிலிருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, அவர் தன் மனைவியுடன் சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஒரு விமானத்தில் இன்று காலை சிங்கப்பூர் புறப்பட்டிருக்கிறார். இரவு 7 மணிக்கு அவர் அங்கு சென்று விடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிங்கப்பூரில் தங்க இருப்பதாகவும் ஜெட்டாவிற்கு செல்லவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.