இலங்கையின் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சே மேலும் 14 நாட்களுக்கு சிங்கப்பூரில் தங்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இலங்கையில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டவுடன் அங்கிருந்து தப்பிய கோட்டபாய ராஜபக்சே குடும்பத்தினருடன் மாலத்தீவிற்கு சென்றார். அங்கிருந்து அவர் சிங்கப்பூர் சென்றதாக தகவல் வெளியானது. சிங்கப்பூர் அரசு, அவர் தங்கள் நாட்டில் இரண்டு வாரங்கள் தங்க அனுமதியளித்தது.
எனினும், அவருக்கு நாங்கள் அரசியல் தஞ்சம் அளிக்கவில்லை என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அவரின் விசா காலம் வரும் 11ஆம் தேதி முடிவடைகிறது. அதன் பிறகு அவர் அந்நாட்டிலிருந்து வெளியேற வேண்டும்.
இலங்கையில் தற்போது வரை நிலை சீராகவில்லை. எனவே, சிங்கப்பூரில் இன்னும் சில நாட்கள் அவர் தங்க அனுமதி அளிக்குமாறு இலங்கை அரசு அனுமதி கேட்டிருக்கிறது. எனவே, மேலும் இரு வாரங்களுக்கு அவர் அங்கு தங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.