கே.வி.ஆனந்த் மறைவிற்கு பிரபல நடிகை தமன்னா தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான அயன், மாற்றான். அனேகன், காப்பான் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் நேற்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை தமன்னா கே.வி.ஆனந்த் மறைவிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பதாவது, “புகழ்பெற்ற கே.வி.ஆனந்த் சார் உடன் பணி புரியும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி.
அவர் ஒரு ரத்தினம் என்பதை பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. தமிழ் திரையுலகில் எனக்கு மறக்கமுடியாத திரைப்படத்தை அவர் கொடுத்தார். ஐயா நீங்கள் ஈடு செய்ய முடியாதவர். குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி” என்று பதிவிட்டுள்ளார்.
I was lucky enough to work with the legendary K.V. Anand sir & got a chance to see what a gem of a person he was. He gave me my most memorable movie in the Tamil film Industry. Sir, you are irreplaceable. My deepest condolences to the family. Om Shanti 🙏🏼 #GoneTooSoon pic.twitter.com/npprKuZqUy
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) April 30, 2021