தொகுப்பாளர் கோபிநாத் மகள் அஜித்தின் பாடலை கிட்டாரில் இசைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது
அஜித் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த திரைப்படம் விசுவாசம் இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஈர்த்த நிலையில் கண்ணான கண்ணே பாடல் அனைவரது வரவேற்பையும் பெற்ற பாடலாக அமைந்தது. டி இமான் இசையமைத்த இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடினார்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நீயா நானா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் மகள் வெண்பா விசுவாசம் திரைப்படத்தின் கண்ணான கண்ணே பாடலை மிகவும் அருமையாக கிட்டாரில் இசைத்துள்ளார். அந்த வீடியோவை கோபிநாத் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அஜித் ரசிகர்கள் மத்தியில் தற்போது அந்த பதிவு வைரலாக பரவி வருகின்றது. இதற்கு முன்னதாக கண்பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் இப்பாடலைப் பாடி பலரது கவனத்தை தன் பக்கம் திருப்பி தற்போது பாடகராக உருமாறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/B_nHUI6HHIJ/?utm_source=ig_web_copy_link