Categories
டெக்னாலஜி பல்சுவை

 85 செயலிகள் ப்ளேஸ்டோரிலிருந்து நீக்கம்… கூகுள் அதிரடி..!!

கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரிலிருந்து 85 செயலிகளைஅதிரடியாக நீக்கியுள்ளது. 

கூகுள் நிறுவனத்தின் பிளே ஸ்டோர் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு செயலிகளை (app ) வழங்கி வருகின்றது. பாதுகாப்பு உள்ளிட்ட ஒரு சில காரணங்களுக்காக அடிக்கடி செயலிகளை பிளே ஸ்டோர் நீக்கியும்  வருகிறது. இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து 85 ஆப்புகளை கூகுள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.

Image result for Play Store

இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில், “ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்ட அவ்வகையான செயலிகளால்  வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத விளம்பரங்கள் அடிக்கடி வருவதாக புகார் வந்ததை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது.  மேலும் தானாகவே பதிவிறக்கம் ஆகும் கேம் செயலிகளையும்  நீக்கியுள்ளது.

Image result for Play Store

இதில் 80 லட்சம் முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட முன்னணி செயலிகளையும் கூகுள் நிறுவனம் நீக்கிவிட்டது. சூப்பர் செல்பி,  சி.ஓ.எஸ் கேமரா, பாப் கேமரா மற்றும் ஒன் ஸ்ட்ரோக் லைன் பஸில் உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. நீக்கப்பட்ட செயலிகளில் பெரும்பாலானவை புகைப்படம் எடுத்தல் மற்றும் கேமிங் தொடர்பான செயலிகளாகும்.

Categories

Tech |