கூகுள் நிறுவனமானது தங்கள் பணியாளர்கள் 10,000 பேரை பணி நீக்கம் செய்ய தீர்மானித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் பல நிறுவனங்கள் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு செலவுகளை குறைக்க தங்கள் பணியாளர்களை நீக்கி வருகிறது. அந்த வகையில் ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பிரபலமான சமூக வலைதள நிறுவனங்கள் பணியாளர்களை நீக்கம் செய்தன. அதனையடுத்து முகநூல், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனமும் 13,000-த்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை நீக்கம் செய்தது.
இவ்வாறு இந்த வருடத்தில் முக்கியமான நிறுவனங்களிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் கூகுள் நிறுவனமும், தங்கள் பணியாளர்கள் 10,000 பேரை பணியிலிருந்து நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. எனினும் தற்போது உடனே யாரையும் பணிநீக்கம் செய்யப் போவதில்லை எனவும் ஊழியர்களின் செயல் திறன்களை கண்காணித்து அடுத்த வருடத்தில் பணி நீக்கம் செய்வோம் எனவும் நிறுவனம் அறிவித்துள்ளது.