Categories
உலக செய்திகள்

ஊழியர்கள் விரும்பினால்….. முழுவதும் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் – அனுமதி அளித்த நிறுவனங்கள்

கொரோனா அச்சுறுத்தலால் ஊழியர்கள் இந்த வருடம் முழுவதும் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது

உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா  பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொருளாதார சரிவும் வேலை இழப்பு என பல பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். தொற்றினால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஊரடங்கு அமல் படுத்தி மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்க வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கு முடியும்வரை பணியினை வீட்டிலிருந்தே செய்வதற்கான நடைமுறையை நிறுவனங்கள் கடைபிடிக்கும் என்றே தெரிகின்றது.

இந்நிலையில் கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் காலத்தைப் நீட்டித்துள்ளது. கொரோனா  அதிகமானதை தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி வரை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி புரியலாம் என கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வாய்ப்புகள் இருந்தால் இந்த வருடம் முழுவதும் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது. அதேபோன்று ஜூலை 6ஆம் தேதி வரை வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு அனுமதி வழங்கிய பேஸ்புக், ஊழியர்கள் விரும்பினால் இந்த வருடம் முழுவதும் வீட்டிலிருந்தே பணியினைத் தொடரலாம் என அறிவித்துள்ளது.

Categories

Tech |