Categories
தேசிய செய்திகள்

எல்லாமே தெரிஞ்சிடும்…. “பயப்படவேண்டாம்” GOOGLEஇன் அசத்தல் கண்டுபிடிப்பு….!!

வெள்ள பாதிப்புகளை கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் வசதியை கூகுள் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சில நாட்களாகவே இந்தியாவின் வடமாநிலப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே வெள்ள பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பலர் உயிரிழந்தும், பலர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியும்  வருகின்றனர். எனவே இதனை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் இந்தியாவிற்கு என தனியாக புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதி மூலம் இந்தியாவில் வெள்ள பாதிப்பு பகுதிகள் குறித்து எளிதில் அறிந்து கொள்ள முடியும். அதன்படி, வெள்ள பாதிப்பு குறித்து கூகுளில் சாதாரணமாக தேடினாலே உடனடியாக வெள்ள பாதிப்பு குறித்து, எந்த இடத்தில் எந்த விதமான பாதிப்புகள் இருக்கிறது என்பது உள்ளிட்ட தகவல்கள் வழங்கப்பட்டுவிடும்.  அதேபோல் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஸ்மார்ட்போன் இருந்தால் அவர்களுக்கு அதற்கான எச்சரிக்கை செய்தியும் உடனுக்குடன்  அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |