நெஞ்சுக்கு நீதி பட நிகழ்ச்சியில் ரசிகர்களுக்குக் குட் நியூஸ் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் அரசியலிலும் பிஸியாக இருந்து வருகிறார். மேலும், படங்கள் வெளியீட்டிலும் பங்கேற்று வருகிறார். தற்போது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ”மாமன்னன்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், இந்த படத்தில் வடிவேலு, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த நெஞ்சுக்கு நீதி பட நிகழ்ச்சியில் ரசிகர்களுக்குக் குட் நியூஸ் ஒன்றை உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதன்படி, ”நான் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்யவில்லை. நல்ல ஸ்கிரிப்ட் கிடைத்தால் நிச்சயமாக படங்கள் நடிப்பேன்.” என கூறியுள்ளார். மேலும், அரசியலையும் கவனித்துக்கொண்டு படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என கூறியதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.