ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 100 % அபராதம் இரத்து என ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனவை கட்டுப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளை திறக்க கூடாது. மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை பெரிய பெரிய வணிக வளாகங்கள் , திரையரங்குகள் , மால்கள் ,சுற்றுலாத் தளங்கள் என பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கு வகையில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. இந்நிலையில் 160 ரயில்களை ரத்து செய்வதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் ஓடக்கூடிய ரயில்களில் 20 சதவீதமான சீட்டுகள் மட்டுமே நிரம்பி இருக்கக் கூடிய நிலையில் ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பலரும் தங்களின் முன்பதிவை ரத்து செய்து வரும் இல்லை ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை இரத்து செய்தால் அதற்கான அபராதத்தொகை விதிக்கப்படும். ஆனால் தற்போது எந்த அபராதமும் விதிக்கப்பட்டாது என ரயில்வே அறிவித்துள்ளது.கொரோனா தாக்குதலால் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் 100 சதவீத அபராதம் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால் அபராதம் இல்லை.ரயில் முன்பதிவு டிக்கெட்டுகளை ரத்து செய்தால் அதற்கான முழுத்தொகையும் வழங்கப்படுமென்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.