மின்கட்டணம் குறித்த தேதிக்குள் செலுத்த வில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில் மக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டுக்குளே இருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் மார்ச் மாதத்திற்குள் செலுத்த வேண்டிய கட்டணத்தை ஏப்ரல் 15ஆம் தேதி வரை செலுத்தலாம் என்றும் மின் வாரியம் அறிவித்துள்ளது.
முன்னதாக மார்ச் மாதத்திற்கான மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற குறுஞசெய்தி வந்ததையடுத்து இது வழக்கமாக வரக்கூடிய குறுஞசெய்தி என்று விளக்கம் அளித்துள்ள மின்சாரவாரியம் மின்சார இணைப்பு துண்டிக்கப்படாது என்று விளக்கம் அளித்துள்ளது.
மேலும் மார்ச் மாதம் கட்ட வேண்டிய பணத்தை ஏப்ரல் 15 வரை கட்டலாம் என்றும், ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் கட்டவில்லை என்றாலும் உங்கள் வீட்டில் மின்இணைப்பு துண்டிக்கப்படாது, தைரியமாக இருக்கலாம் என்று மின்சார வாரியம் நம்பிக்கை அளித்துள்ளது.