Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“BSNL வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்”…. இதோ சிறப்பு சலுகைகள்….!!!!!!

பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரி தெரிவித்து இருக்கின்றார்.

பி.எஸ்.என்.எல் கடலூர் முதன்மை பொது மேலாளர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்திய அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தனது நிறுவன தினத்தை கொண்டாடும் விதமாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கின்றது.

அது என்னவென்றால் ரூபாய் 599, ரூபாய் 799, ரூபாய் 999 மற்றும் ரூபாய் 1,499 திட்டங்களில் ஆறு மாதம் அல்லது ஒரு வருட சந்தா செலுத்தி புதிய பாரத் பைபர் எஃப்.டி.டி.ஹெச் எனப்படும் வாடிக்கையாளருக்கு சிங்கிள் பேண்ட் அல்லது டபுள் பேண்ட் வைஃபை மோடம் கூடுதல் பணமின்றி தொகுப்பாக வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர் சலுகையை பயன்படுத்தி இணைப்புகளை பெறுவதற்கு அருகில் இருக்கும் பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் பிஎஸ்என்எல் பாரத் பைபர் எஃப்.டி.டி.எச் முகவர்களை அணுகி பயனடையலாம். இந்த சலுகை ஆனது நேற்று முதல் அமலுக்கு வந்திருக்கின்றது.

Categories

Tech |