தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து முடிவை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர்.
இவர்களின் அறிவிப்பு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பிறகு இருவரும் சந்தித்தாலும் பேசிக்கொள்ளவில்லை. இந்நிலையில் ரசிகர்களுக்கு குட் நியூஸ் கிடைத்துள்ளது. அதன்படி இவர்கள் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தனுஷ் ஐஸ்வர்யா குடும்பத்தினர் இதை உறுதிப்படுத்தினால் தான் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியும்.