Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்… தமிழகத்தில் இதுவரை 1,312 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்!

தமிழகத்தில் இதுவரை 1,312 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,526 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 203 பேரில் ஆண்கள் – 117 பேர், பெண்கள் 81 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை – 176, செங்கல்பட்டு – 8, திருவள்ளூர் – 6, மதுரை – 3, காஞ்சிபுரம் – 2, தஞ்சாவூர் – 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர், நாகை, விழுப்புரத்தில் தலா ஒருவரும் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இன்று 98 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 84 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,312 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் குணமடைந்தோர் சதவிகிதம் அதிகமாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 1,29,365 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 9,365 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |