நேற்று மட்டும் கொரோனா பாதித்த 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,860,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,035,787 பேர் குணமடைந்த நிலையில் 432,200 பேர் உயிரிழந்துள்ளனர். 3,392,743 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,082 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 100,780 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திருப்பியவர்களின் எண்ணிக்கை 4,022,204 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக நேற்று பிரேசில் நாட்டில் 30,918 பேரும், அமெரிக்காவில் 12,172 பேரும், பாகிஸ்தானில் 9,809 பேரும், இந்தியாவில் 8,095 பேரும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று மட்டும் 128,403 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட நிலையில் 1 லட்சம் அளவில் குணமடைந்து வீடு திருப்பியது குறிப்பிடத்தக்கது.