ஜனவரி 1 முதல் சில குறிப்பிட்ட ரக ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று வாட்ஸ்அப். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் 90 முதல் 95 சதவீதம் வரை வாட்ஸ் அப்பை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டு மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ் அப் செயலி இயங்காது எனவும் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியானது இது முதல்முறை அல்ல.
அவ்வப்போது இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப் படுகிறது. ஐ போன்களில் iOS9 என்ற மென்பொருளுக்கு முந்தைய வெளியீட்டு மென்பொருளைப் பயன்படுத்தும் அதாவது ஐபோன் 4 மற்றும் அதற்கு முந்தைய மாடல் போன்களில் இனி வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது. 4S, 5, 5S, 5C, 6 , 6S போன்களை மென்பொருள் . அப்டேட் செய்வதன் மூலம் வாட்ஸ்-அப் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதுபோன்று ஆண்ட்ராய்ட் மொபைல்களில் ஆண்ட்ராய்ட் 4.0.3 பதிப்புக்கு முந்திய பதிப்புகளில் பயன்படுத்தும் போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது என வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
பின்வரும் தொலைபேசிகள் Android OS 4.0.3 மற்றும் புதியவற்றை இயக்காமல் இருக்கலாம்.
- HTC
- கூகிள் நெக்ஸஸ் எஸ்
- சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா ஆர்க்
- எல்ஜி ஆப்டிமஸ் 2 எக்ஸ்
- சாம்சங் கேலக்ஸி எஸ் I9000
- HTC டிசைர்
- மோட்டோரோலா டிரயோடு ரேஸ்ர்
- சாம்சங் கேலக்ஸி எஸ் 2
போன்ற செல்போன்களில் வாட்ஸுப் இயங்காது.