Categories
பல்சுவை

சட்டமேதை அம்பேத்கரின் பொன்மொழிகள்….!!

சட்டம் பல உருவாக்கி பலரது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்த அண்ணல் அம்பேத்கரின் பொன்மொழிகள்

  • சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள்.
  • அடிபணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல்.
  • ஒருவன் நாணயமானவனாக இருக்கலாம். ஆனால் அவன்அறிவாளியாக இருந்தால் பயனில்லை. மாமனிதனுக்கு நேர் முரண் அறிவாளி.
  • தாய்மொழியில் குறைந்தது ஆரம்ப கல்வி கூட பெற முடியாத குழந்தைகளின் கல்வி மதிப்பற்றது, பொருளற்றது.
  • நீதி நம் பக்கம் இருப்பதால் நாம் நமது போரில் தோல்வி அடைய வாய்ப்பில்லை.
  • விதி என்று ஒன்று கிடையாது. மக்கள் மனதில் இப்படிப்பட்ட எண்ணம் அடியோடு களைந்து எறியப்பட வேண்டும்.
  • ஒரு மனிதன் உன்னை கொல்ல வரும் போதும், ஒரு பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சிக்கும் போதும், திருடுபவன் தப்பிக்க முயற்சிக்கும் போதும் வன்முறை நடந்தே தீரும்.
  • தீண்டத்தகாத மக்களை உயர்த்தாமல் இந்த நாடு மேன்மை அடையாது.

  • அகிம்சை வேண்டியது தான். ஆனால் அதுவே எப்போதும் நல்ல கொள்கை ஆகிவிடாது. சில நேரங்களில் வன்முறை அவசியமே.
  • விதி என்று ஒன்று கிடையாது ஒவ்வொருவருடைய முடிவும் முன்னாடியே முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை நான் நம்பவில்லை.
  • அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.
  • உங்கள் வறுமை உடன் பிறந்தது தவிர்க்க முடியாதது தீர்க்க முடியாதது என்று எண்ணுவது மடமை.
  • ஜாதி என்னும் கால்ப் உணர்வினால் பெரும்பாலான பெரும்பாலான மக்கள் மனிதத்தன்மையற்று வாழ்கின்றனர்.
  • எனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை நான் புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் மனிதனே இல்லை.
  • வறுமையிலும் அறியாமையிலும் வாடும் தன் சகோதரர்களுக்கு கற்றவர் ஒவ்வொருவருக்கும் தலையாய கடமையாகும்.
  • விழுமியக் குறிக்கோளில் ஒருவன் கொண்டுள்ள மெய்யான ஈடுபாடும் திறமையும் நிரூபிக்கப்படும்போது அவனுடைய எதிரிகள் கூட அவனை மதிப்பார்கள்.

Categories

Tech |