Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“Golden Milk” கிடைக்கும் நன்மைகள் தெரியுமா….?

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும் என்பதை காண்போம்.

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதை “கோல்டன் மில்க்” என்று கூறுவார்கள் மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் பலவகையான நன்மைகள் எற்படுகின்றன. இதனால் ஜப்பானில் இன்று வரை பாலில் மஞ்சள் கலந்த குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

1.  நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

நோய்களைத் தவிர்க்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றே குறிப்பாக இருமல் சளி போன்ற நேரத்தில் மஞ்சள் கலந்து பால் குடிப்பது மிகவும் நல்லது. உடலில் ஏதேனும் நோய் தொற்றால்  பாதிக்கப்பட்டிருந்தாலும் மஞ்சள் பால் குடிக்கும் போது அதை எதிர்த்து போராடும்  சக்தி கிடைக்கும்.

2.  நீரிழிவு நோய்

மஞ்சளில் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடக்கூடிய குர்கியூமின் என்ற ஆற்றல் உள்ளது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும். உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மஞ்சள் அளவு எவ்வளவு எடுத்துக்கொள்ளலாம் என்பதை கேட்டறிந்து கொண்டு அதன் பின் குடியுங்கள்.

3.  இதயத்திற்கு நல்லது

இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மஞ்சள் மிக முக்கியமான பொருளாகும். கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்து இதயம் சீராக இயங்க உதவுகிறது. இதயம் சீராக இருந்தாலே ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.

Categories

Tech |