799 கிராம் தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு கடந்த 28ஆம் தேதி துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்துள்ளது. அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் இந்த விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக வந்த ஒரு நபரை தனியறைக்கு அழைத்து சென்று அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.
அந்த சோதனையில் பெரம்பலூர் மாவட்டத்தில் வசித்து வரும் பாலசுப்பிரமணியம் என்பவர் தனது உடலில் 799 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை சுங்க துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தங்கத்தை கடத்தி வந்த குற்றத்திற்காக பாலசுப்பிரமணியனை கைது செய்ததோடு, அவர் கடத்தி வந்த தங்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விட்டனர்.