Categories
சற்றுமுன்

மீண்டும் உச்சம்.. ரூ.37,000ஐ தாண்டிய தங்கம் விலை!

சென்னையில் இன்று  தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, 37,128 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பின் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ளன. அதே சமயம்  பெரும்பாலான இடங்களில் நகைக்கடைகள் மூடப்பட்டு இருந்தாலும் தங்கம் விலை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி முதன்முறையாக தங்கத்தின் விலை சவரனுக்கு 36,000 ரூபாயை  தாண்டி விற்பனை செய்யப்பட்டது. அதன்பின் ஜூன் 24ஆம் தேதி , தங்கம் விலை 37,000 ரூபாயை தாண்டியது. இவ்வாறு ஏற்றம்  இறக்கமாக இருந்து வந்த தங்கத்தின் விலை வரலாற்றில் முதன்முறையாக ஜூலை 1ஆம் தேதி புதிய உச்சத்தை அடைந்தது.

அன்றைய தினம்( ஜூலை 1) தங்கம் சவரனுக்கு ரூ.37,472க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் ரூ.36,976ஆக குறைந்த தங்கம் விலை தொடர்ந்து 5 நாட்களாக எந்தவித மாற்றமும் இன்றி காணப்பட்டது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.37,000ஐ தாண்டியுள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ. 37,128க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஒரு கிராம் ரூ.19 உயர்ந்து ரூ.4,461க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ. 53.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |