Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடியால் தத்தளிக்கும் பாகிஸ்தான்… மக்களிடம் தங்கத்தை கேட்கும் அவல நிலை…!!!

கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கும் பாகிஸ்தான் அந்நிய செலவாணி கையிருப்பை  உயர்த்த மக்களிடம் கடனாக தங்கத்தை வாங்குவதற்கு தீர்மானித்திருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில் ரிசர்வ் வங்கி கணக்கு அடிப்படையில், அந்நிய செலவாணி கையிருப்பு 17 பில்லியன் டாலராக சரிந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, அந்நாட்டின் ரிசர்வ் வங்கி ஆளுநரையும், பொருளாதார முதன்மை குழுவினரையும் அதிபர் இம்ரான் கான் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

இது தொடர்பில் பாகிஸ்தானின் நிதியமைச்சரான சவுகத் தாரின் தெரிவித்ததாவது வர்த்தக வங்கிகளின் மூலம் மக்களிடமிருந்து தங்கத்தை கடனாக வாங்க வைக்கப்பட்டிருக்கிறது என்றும் இதைவைத்து அந்நிய செலவாணி கையிருப்பை அதிகரிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்

Categories

Tech |