Categories
தேசிய செய்திகள்

அசாமிற்கு பொன்னான எதிர்காலம் காத்திருக்கிறது….காங்கிரஸ் தலைவர் பிரியங்கா கருத்து..!!

தேர்தல் கட்ட முடிவுகளுக்கு பின்பு ‘அசாம் மாநிலத்துக்கு பொன்னான எதிர்காலம்’  இருக்கின்றது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வாங்குபதிவினை பற்றி   காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

இன்று அசாமில் முதல் கட்ட தேர்தல் தொடங்கிவிட்ட நிலையில், அங்குள்ள அசாம் மக்கள் குறிப்பாக இளைஞர்கள், சகோதரிகள், கல்லூரி மாணவர்கள் அனைவரும் அதிக அளவில் வந்து ஓட்டு போட்டு வாக்கினைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார். ஓட்டுப்பதிவு சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது. அசாம் மாநிலத்துக்கு பொன்னான எதிர்காலம் அமைய வாய்ப்பு இருக்கின்றது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Categories

Tech |