கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் முன்பாக சுவாதி தற்போது ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்டம் வன்கொடுமை சிறப்பு நீதிமன்றமானது 10 பேரைக் குற்றவாளிகளாக அறிவித்ததோடு மட்டுமல்லே, அவர்களுக்கு ஆயுள் தண்டனைகளையும், சாகும்வரை சிறையில் இருக்கவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு தாக்கல் செய்திருந்தனர். இதே போல கோகுல்ராஜ் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையானது மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர் படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் தற்போது நீதிபதிகள் முன்பாக சுவாதி ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். விசாரணை போது சுவாதியின் வாக்குமூலமானது, கோகுல்ராஜ் கல்லூரியில் தன்னுடன் ஒரே வகுப்பில் படித்தார். சக மாணவரை சக மாணவர் போலவே கோகுல்ராஜ்யும் தெரியும். சக மாணவர்களோடு பேசியது போல தான் கோல்ராஜிடமும் பேசி உள்ளேன் என சுவாதி கூறினார்.
மேலும் அவர் வசதி குறைந்த வகுப்பை சேர்ந்தவர் என தெரியுமா ? என நீதிபதி கேட்டபோது, தெரியாது என பதிலளித்தார். 23.6.2015 ஆம் ஆண்டு படித்து முடித்த பின்னர் என்ன நடந்தது என சொல்லுங்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நடந்தவற்றை மட்டும் கூறுங்கள் எனவும், 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் நினைவு இருக்க வாய்ப்பில்லை, நாங்கள் ஞாபகப்படுத்துகிறோம் எனவும் அறிவுரை வழங்கினர் . அன்று காலை யாரையும் பார்க்கவில்லை எனவும் சுவாதி கூறினார்.
உண்மையை சொல்லவில்லை என்றால் அதில் தொடர்பான வீடியோவை போட்டு காண்பித்து நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்தனர். இதனை அடுத்து தொடர்ந்து வீடியோ காட்சியை நீதிபதிகள் சுவாதிக்கு காண்பித்தனர். தொடர்ந்து வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்ட போதும், சுவாதி நினைவில்லை எனவும், வீடியோ காட்சியில் உள்ள நபர் நான் அல்ல எனவும் தொடர்ந்து சாட்சியாக தெரிவித்த நிலையில், தற்போது இந்த விசாரணையானது மேற்கொண்டு நடந்து வருகிறது.