Categories
சினிமா தமிழ் சினிமா

பாதியிலே செல்வது கஷ்டத்தை அளிக்கிறது… பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை வருத்தம்…!!!

ஹிட்ஸ் சீரியலை விட்டு பாதியிலே செல்வது கஷ்டமாக இருக்கிறது என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை கூறியுள்ளார்.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக சோக காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. ஏனென்றால் இதில் லட்சுமி அம்மா இறந்துவிடுகிறார். மேலும் கண்ணனாளும் அம்மாவை இறுதிவரை பார்க்க முடியாமல் போய்விடுகிறது.

இந்நிலையில் லட்சுமி அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷீலா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முதல் நாளிலிருந்து மூன்று வருடங்களாக நடித்திருக்கிறேன்.

நல்ல ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் இருந்து பாதியிலேயே செல்கிறோம் என்பது மிகவும் கஷ்டத்தை அளிக்கிறது. மற்றபடி இறந்த காட்சியில் நடித்ததெல்லாம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கடைசி காட்சியில் நடிக்கும் போது வெயில், கூட்டம் அதிகம் இருந்ததால் அப்போது தான் சற்று சிரமமாக இருந்தது என்று கூறியுள்ளார்.

 

Categories

Tech |