Categories
மாநில செய்திகள்

GoBack சொன்னவர்களே இன்று வெல்கம் செய்கிறார்கள்…. நடிகை கஸ்தூரி விமர்சனம்…..!!!!

தமிழகத்தில் முதல்முறையாக 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் 28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில் GoBack மோடி என சொல்லி கொண்டு இருந்தவர்கள் இன்று அவரை வரவேற்பது ஏன் என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், அன்று எதிர்த்தவர்கள் இன்று வெல்கம் வெல்கம் என தங்கள் முதுகையே சிவப்பு கம்பளமாக காட்டுகிறார்கள். நாங்கள் வந்தால் நீட் இருக்காது என்று சொல்லி வாக்கு சேகரித்தவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நீட் தேர்வு நடந்து கொண்டே தான் இருக்கிறது என்று கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |