Categories
தேசிய செய்திகள்

காதலியை தேடி பாகிஸ்தானுக்கு சென்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர்… 4 ஆண்டு அனுபவித்த சிறை தண்டனை…!

பாகிஸ்தானில் உள்ள தனது காதலியை பார்க்க சட்டவிரோதமாக நுழைந்த இளைஞர் 4 ஆண்டு சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகினார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் பிரசாந்த் ஆன்லைன் மூலம் ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணை பார்ப்பதற்கு கடந்த 2017ஆம் ஆண்டு சட்ட விரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்து உள்ளார். ஆனால் காதலியை பார்ப்பதற்கு முன்பே காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவரை காணவில்லை என்று அந்த இளைஞனின் தந்தை பாபுராவ் புகார் அளித்தார். பின்னர் அவர் இருக்குமிடம் தெரிந்த பிறகு, பிரசாந்தின் வீடியோவும் பாகிஸ்தானிலிருந்து வெளியிடப்பட்டது.

அவரது தந்தை தனது மகனை ஒப்படைக்கக் கோரி மாநில அரசு மற்றும் வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதினார். நான்கு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு அவரை விடுவித்த பாகிஸ்தான் அரசு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பிரசாத் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். இதற்கு முயற்சி செய்த அனைத்து தரப்பினருக்கும் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

இதையடுத்து சிறையில் இருந்து வெளியில் வந்த பிரசாந்த் நான் அனுபவித்த சிறை தண்டனை பற்றி கூறியுள்ளார். தன் காதலியைப் பார்ப்பதற்காக பாகிஸ்தானிற்கு சென்றேன். ஆனால் அங்கு தன் காதலியை பார்க்க செல்வதற்கு முன்னரே பாகிஸ்தான் அரசு தன்னை கைது செய்தது. இதுகுறித்து அவர்களிடம் கூறியும் அவர்கள் சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக கூறி என்னை கைது செய்தனர். 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தேன். தன் வேலையை இழந்து, தனது பெற்றோர்களை பார்க்க முடியாமல் நான் தவித்தேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |