நம்மில் பெரும்பாலானோர் முதுகு வலியால் அவதிப்பட காரணமே நமது வாழ்க்கை முறை தான். நல்ல உணவு முறை, உடற்பயிற்சி, சரியான தோற்ற நிலையில் உணர்வது, வேலை செய்வது உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கங்கள் மூலம் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
இதற்கு பின்வரும் யோசனைகளை தினமும் பின்பற்றினால் முதுகுவலி பறந்துவிடும்.
தினசரி ஸ்ட்ரெச்சிங்:
உடலை வளைத்து நிமிர்த்தி மேற்கொள்ளும் ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள் உடலின் நெகிழ்வுத் திறனை மேம்படுத்தி உங்களை சுறுசுறுப்பாக்கும். காலை மாலை என இருவேளைகளிலும் நீங்கள் ஸ்ட்ரெச்சிங் செய்துவந்தால் உங்களது கை, கால்கள், முதுகு உள்பட உடல் இயக்கத்தை எளிதாக்குவதுடன் முதுகு வலியை போக்கும்.
யோகா பயிற்சி:
அடி முதுகு வலியை விரட்ட மிகச் சிறந்த தீர்வு யோகா. யோகா பயிற்சிகளால் உடலின் நெகிழ்வுத் தன்மையும் வலிமையும் அதிகரிப்பதுடன் மன அழுத்தமும் குறையும். வளைந்து துணியில் முடியாத நிலையில் இருக்கும் முதியோர் மற்றும் நோயுற்றோர் சேர் யோகா செய்யலாம்.
சைல்டு போஸ் – பாலாசனா
இந்த யோகாசனத்தை செய்யும்போது உங்களைப் பார்க்கும் மற்றவர்கள் நீங்கள் ஓய்வெடுக்கிறீர்கள் என நினைக்கக்கூடும். முதுகு ஆரோக்கியத்திற்கு உதவும் சிறந்த யோகா முறையாக இது உள்ளது. இது உங்கள் முதுகெலும்பு மற்றும் தொடை எலும்பு இரண்டிற்கும் நன்மை பயக்கும் முறையாக உள்ளது. மேலும் உங்கள் முதுகு மற்றும் கழுத்துப்பகுதி நிதானமடையவும் இது உதவுகிறது.
உங்கள் முதுகை வலுப்படுத்த:
1.lying knee hug stretch
2.bottom to heel stretch
3. the bridge stretch