அமெரிக்கா மற்றும் சீன நாடுகளால் உலக பொருளாதார இரண்டாகி விடக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
கம்போடியாவிலுள்ள நாம்பென் நகரத்தில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக இருக்கும் ஆண்டனியோ குட்டரெஸ், நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நேற்று நடைபெற்ற மாநாட்டில் நான் தெரிவித்தது போல எவ்வளவு விலையை கொடுத்தாவது பொருளாதாரத்தை பிரிக்க விடாமல் தவிர்ப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
அதிக அளவில் பொருளாதாரத்தை வழிநடத்திக் கொண்டிருக்கும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளால் அவை இரண்டாகி விடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். இரண்டு இணையதளங்கள், செயற்கை நுண்ணறிவில் மோதும் இரு செயல் திட்டங்கள், வெவ்வேறான இரண்டு விதிகள், இரண்டு ஆதிக்க கரன்சிகள் போன்றவை புதிதாக சவால்களை எதிர்நோக்கும் உலகத்தின் திறனை புதைத்து விடும் என்று எச்சரித்திருக்கிறார்.
இரு வருடங்களுக்கு முன்பாக அமெரிக்கா, சீனா மீது பொருளாதார தடையை அறிவித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க நாட்டின் உள்நாட்டு உற்பத்தி தொடர்பான பொருட்களின் இறக்குமதிக்கு சீனா பொருளாதார தடை அறிவித்தது. இந்த இரண்டு நாடுகளின் மோதல்களால் உலக பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. உலக நாடுகள் இரு வருடங்களாக கொரோனா என்னும் பெருந்தொற்றில் மாட்டி தவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மீண்டும் அவ்வாறான நிலை ஏற்படக்கூடாது என்று அவர் கூறியிருக்கிறார்.