Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவும் கொடுங்க…. பாஜகவும் கொடுங்க…. ரூட் போட்டு அடித்த திமுக …!!

திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் இன்று பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

கொரோனா தொடங்கிய காலம் முதலே திமுக தலைமையிலான கூட்டணி அரசு செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையும் குற்றம்சாட்டி வந்தது. குறிப்பாக ஆளும் அரசு மேற்கொள்ளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருக்கும் குறைகளை கண்டறிந்து, அதற்கு இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள் என்று ஏராளமான ஆலோசனைகளை வழங்கி வந்த நிலையில் இன்று மீண்டும் திமுக கூட்டணி கட்சிகள் காணொளி மூலம் ஆலோசனை நடத்தின.

11 கட்சிகள் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது. இதில் மாநில அரசின் நடவடிக்கையை மட்டுமல்லாமல் மத்திய அரசையும் மக்களுக்கான கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என்று வலியுறுத்தி, மத்திய அரசுக்கும் கோரிக்கை வைத்தன.

குறிப்பாக மத்திய மாநில அரசுகள் இரண்டுமே மக்களுக்கு நிவாரணம் உள்ளிட்ட விஷயங்களை வழங்க வேண்டும் என்று வழக்கமான அரசியலை திமுக கூட்டணி முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் தமிழக அரசு குடும்ப அட்டைகளுக்கு வழங்கிவரும் ஆயிரம் ரூபாய் போதாது என்றும், அவர்களுக்கு 5000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும்,  மத்திய அரசு 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என்று இருவரையும் பொறுப்பாகி பொறுப்பான எதிர் கட்சி என்று திமுக உணர்த்தியுள்ளது.

Categories

Tech |