திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக தேசிய விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு அரை நிர்வாணத்துடன் போராட்டம் நடத்துகின்றார்.
மத்திய நிதியமைச்சர் 20 லட்சம் கோடி அறிவித்திருந்தார்கள் அது அனைத்து தரப்பினருக்கும் உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான எந்தவிதமான சலுகைகளும் இல்லை. கொரோனா பாதிப்பால் விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை இல்லை, சந்தை படுத்த முடியவில்லை. பொதுமக்களும் வீட்டுக்குள்ளேயே அடைந்து இருப்பதால் விவசாயிகள் மிகுந்த துயரத்துக்குள்ளாகிள்ளோம். உடனடியாக ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
இன்சூரன்ஸ் ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கோவணத்துடன் போராட்டம் தொடங்கி இருக்கிறது. திருச்சி மாவட்ட அலுவலகத்திற்கு முன்னதாக இவர்கள் தனிமனித இடைவெளியுடன் நின்று கொண்டிருக்கிறார்கள்.
கோவணத்துடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். விவசாயிகள் மிகுந்த மன வேதனையில் வாழ்வாதாரத்தை இழந்து இருப்பதால் இது உரிமைக்கான போராட்டம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.