Categories
தேசிய செய்திகள்

வானிலிருந்து மருந்து வழங்கும் திட்டம்… அரசின் புதிய முயற்சி…!!!

ப்ளிப்கார்ட் நிறுவனம் தெலுங்கானா அரசுடன் இணைந்து தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகளை ட்ரோன் மூலம் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்ததால் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களிலும் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வந்தது. இதையடுத்து மக்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அந்தந்த மாநிலத்தை சேர்ந்த முதல்வர்கள் தீவிரப்படுத்தி வருகின்றன. மேலும் தடுப்பூசி குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் தெலுங்கானா மாநிலம் ப்ளிப்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகளை ட்ரோன் மூலம் விநியோகம் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் மூலம் தொலைதூர பகுதிகளுக்கு எளிதில் மருந்து பொருள்களை விநியோகம் செய்ய முடியும். இந்த திட்டத்திற்கு வானில் இருந்து மருந்து என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான வெள்ளோட்டம் ஆறு நாட்களுக்கு நடைபெற உள்ளது.

Categories

Tech |