Categories
தேசிய செய்திகள்

உணவு கொடுங்க… இல்ல ஊருக்கு விடுங்க…. கேட்டதற்கு மும்பையில் தடியடி …!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சொந்த மாநிலத்துக்கு செல்லக்கோரி போராடிய தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று நாட்களுக்கு முன்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் 300 பேருக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எங்களை ஊருக்கு அனுப்பி வையுங்கள் என்று கோரி சாலைகளில் இறங்கி, அங்கு இருக்கக்கூடிய பொருட்கள், கடைகளை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அதே போல டெல்லியில் உள்ள சில முகாம்களில் தொழிலாளர்கள் பிரச்சனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சாலையில் இறங்கி  போராடினர். அவர்களுக்கு மிக முக்கியமான கோரிக்கையை இருப்பது எங்களுக்கு உடனடியாக சாப்பிடுவதற்கு உணவு கொடுக்க வேண்டும்.எங்களது குடும்பம் எங்களது ஊர்களில் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன ? ஆச்சு என்று எங்களால் தெரியவில்லை எனவே உடனடியாக எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 20 நாட்களுக்கும் மேலாக இங்கேயே தங்கி விட்டோம். இனி மேல் எங்களால் தங்க முடியாது என்று போராடினர்.

மகாராஷ்டிராவில் மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் 3000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கக் கூடிய சூழலில் இந்த போராட்டம் கவலை அளிக்கக்கூடியதாக பார்க்கப்பட்டது. சமூக இடைவெளி இல்லாமல் தொழிலாளர்கள் ஒரே இடத்தில் கூடியதால் கொரோனா நோய் பரவல் மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டு இருந்தது.

மேலும் போராட்டம் நடத்திய இடத்திற்கு மற்ற பல்வேறு பகுதியில் உள்ள பலரும் குவியத் தொடங்கியதால் இதனை கட்டுப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டகாரர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படியுங்க : 

https://www.itamilnews.in/sudden-agitation-by-workers-in-mumbai.php

 

Categories

Tech |