Categories
அரசியல் மாநில செய்திகள்

1 ரூபாய்… 3 ரூபாய்… 5 ரூபாய்…. 10 ரூபாய் கொடுக்கீங்க…. கருணை உள்ளதோடு கொடுக்க சொன்ன அன்புமணி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னையில் உள்ள மழை நீர் வடிகால் வருடம் வருடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது சென்னைக்கு சேட்டிலைட் மேப்பிங் செய்து, எந்த தெருவில் எவ்வளவு மழை பெய்யும் ? எவ்வளவு தண்ணீர் நிற்கும் என்று தகவல்கள் வைத்திருக்கிறார்கள்.  இப்போது மட்டுமல்ல 20 வருடமாகவே இந்த தகவல்களை வைத்திருக்கிறார்கள். அதற்கு ஏற்ப மழை நீர் வடிகால் போவதை மழை தொட்ங்கும் முன்பே கட்டி, அதை செயல்படுத்த வேண்டும்.

மழை வந்த பிறகு, பள்ளம் தோண்டி கான்கிரீட் போட்டு, கம்பி கட்டினால், சேர் வந்துவிடும், அதிலே கலந்து விடும்.மழை வருவதற்கு முன்பு  இந்த தெருவுக்கு இவ்வளவு தேவைப்படும், 2 அடி அகலம், 3 அடி உயரம். 4 அடிக்கு 3 என்று அதற்கு ஏற்ப செய்ய வேண்டும். அந்த தெருவில் 20 நாட்களில் கட்டி முடித்து விடலாம். இதுல அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும்.

திநகர் பகுதியில் என் வீடு இருக்கிறது. அங்கு 2 வருடத்திற்கு முன்பு மழை நீர் வடிகால் கட்டினார்கள், இப்போது மொத்தமாக இடித்து கொண்டிருக்கிறார்கள். இடித்துவிட்டு புதிதாக கட்டுகிறார்கள். சரியான இணைப்பு இல்லை, சேர் மாட்டிவிட்டது, சிலது பத்தவில்லை. ஏதோ பேருக்கு கட்டினோம் என்று கட்டிட்டு போய் விட்டார்கள். பிறகு ஸ்மார்ட் சிட்டி என்று சொல்லி என்ன பிரயோஜனம்?

விவசாயிகளுக்கு கருணை  உள்ளம் கொண்ட அரசு செயல்பட வேண்டும். ஏனென்றால் இதற்கு முன்பு பத்து நாளுக்கு முன்பு மயிலாடுதுறை போகும்போது இழப்பீடு சில விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கொடுத்திருக்கிறார்கள், மூன்று ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய் என்று கொடுத்திருக்கிறார்கள். அது  விவசாயிகளை அவமதிக்கின்ற செயலாக இருக்கிறது. ஒரு ரூபாய் என்ன கொடுக்கிறீர்கள் இழப்பீடாக? இது  தவறான விஷயம். கருணை உள்ளத்துடன் நிச்சயமாக அரசு  பார்த்து கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு  மிகப்பெரிய நஷ்டம், விலையும் இல்லை என தெரிவித்தார்.

Categories

Tech |