தூத்துக்குடியில் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலரை கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கல்லூரி மாணவி புகார் அளித்திருக்கிறார்.
தூத்துக்குடியில் சொந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் இளம்பெண் ஏமாற்றப்பட்டுள்ளார். பள்ளிக்காலம் முதல் காதலித்து வந்த காதலர் காதலியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பதுள்ளதால் இந்த துயர சம்பவம் வெளியே வந்துள்ளது.தூத்துக்குடியைச் சேர்ந்த 18 வயதான இளம்பெண் ஒருவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தனது ஊரை சேர்ந்த வினித் என்ற இளைஞரை அவர் காதலித்து வந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் இளம் பெண்ணின் பெற்றோர் வெளியில் சென்றிருந்த போது அவரது வீட்டிற்குச் சென்ற வினித் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார். அதில் அந்த பெண் கருவுற்றிருக்கிறாள்.இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளம்பெண் கூறி வந்தார். அப்போது தனது சுயரூபத்தைக் காட்டி உள்ளார் வினித்.
இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்த வினித் அவருடன் தனிமையில் இருந்ததை வீடியோ பதிவு செய்து வைத்திருப்பதாக கூறியுள்ளார். திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினால் வீடியோவை சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். மேலும் இளம் பெண்ணின் பெற்றோரிடம் சென்று கருவை கலைத்துவிடுமாறும் அவர் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து செய்வதரியாமல் திகைத்த இளம்பெண்ணும் , அவரது பெற்றோரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய வினித்தை கைது செய்ய வேண்டும் என்றும், தனக்கு பாதுகாப்பு , மருத்துவ சிகிச்சையும் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். காதல் வலையில் வீழ்த்தி இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.