அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இன்றைக்கு 53% மின்சார கட்டணம் உயர்வு.அதிமுக ஆட்சியில் இருந்த போது, உயர்நீதிமன்றம் வீட்டு வரி உயர்வு செய்யணும்னு சொன்னவுடனே, 10% , 20% உயர்த்த முற்பட்டோம். உடனே அதற்கு ஒரு ஆர்ப்பாட்டம், போராட்டம். வீட்டு வரி உயர்வை கேட்டாலே, வீட்டை வித்துட்டு போய்டலாம் என சொன்னவர் இன்றைய முதலமைச்சர். சொன்னாரா ? இலையா ?
போராட்டம் பண்ணுனாரா இல்லையா ? அவர் மட்டுமா செஞ்சாரு. அவரு கூட பக்கவாத்தியம் வாசிக்கின்ற… அவர் கூட இருக்கின்ற கூட்டணி கட்சிகள். அன்னைக்கு எதிர்க்கட்சியாக இருந்தவர்கள்… கம்யூனிஸ்ட், திருமாவளவன் அவர்கள் அத்தனை கட்சிகளும் பேசினார்கள். தன்னார்வத்தோடு பேசினார்கள். முன்னாடி எல்லாம் பெரியவங்க மதுவுக்கு அடிமையாக இருந்தார்கள், மது குடிப்பார்கள்.
மது குடித்துவிட்டார்கள் என்றால் ஊரில் ஆட்களை பார்த்ததும் துண்டை போட்டுட்டு குனிந்து போவார்கள். போவார்களா ? இல்லையா ? நாலு பேருக்கு தெரிந்து விடக்கூடாது. வீட்டுக்கு தெரிந்து விடக் கூடாது. வீட்டிலே போய் வாயை பொத்தி விட்டு சாப்பாடு போடுங்க அப்டின்னு சொல்லுவார்கள். இன்னைக்கு என்னவென்றால் தண்ணி அடிக்காதவன் பயந்து கொண்டு போக வேண்டியுள்ளது இந்த ஆட்சியில்…. இன்னைக்கு சின்ன பையனுங்க குடித்துவிட்டு ஆட்டம் போடுகின்றனர், மாணவிகள் குடித்துவிட்டு தெருவில் கிடக்குறாங்க. போதைக்கு அடிமையாகிறார்கள் என பரபரப்பு விமர்சனத்தை முன்வைத்தார்.